நெஞ்சு வலி அறிவது எப்படி? - நலக் குறிப்புகள்

நெஞ்சில் வலி ஏற்பட்டாலே, அது மாரடைப்போ என்ற பயம் தொற்றுகிறது. ஆனால், எல்லா வகை நெஞ்சு வலியும் இதய பாதிப்பால் உண்டாவது இல்லை.

குடல்புண் போன்ற காரணத்தாலும் நெஞ்சு வலி வரலாம். நெஞ்சுப் பகுதியில் சிறிது நேரம் வந்து போகும் வலிக்கும், இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.  

நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங்கில் ஈடுபடும்போது வலி ஏற்பட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து வலி குறைந்தால், அது ஆஞ்ஜைன்னாவாக இருக்கலாம். 

ஆஞ்ஜைன்னா என்பது மாரடைப்புக்கு முந்தைய நிலை என்று சொல்லலாம். எனவே, இதுபோன்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  

இதய பாதிப்பால் ஏற்படும் வலி, மூச்சுத் திணறலுடன் ஏற்படும். இதயத்தை முறுக்குவது (அ) நெஞ்சின் மேல் அதிக எடையை வைத்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

சிலருக்கு நெஞ்சின் கீழ் பகுதியில் எரிவது போல் உணரலாம். இதயம் இடது பகுதியிலில் இருந்தாலும், பொதுவாக இந்த வலி நெஞ்சின் நடுப்பகுதியில் உண்டாகும்.

தனிமையில் காலை வேளையில் நடைபயிற்சி செய்யும்போதோ, வாகனம் ஓட்டிச் செல்லும்போதோ மாரடைப்பு ஏற்பட்டால், பதற்றப்படாமல் இருக்க வேண்டும். 

பயந்தால் உடலில் உருவாகும் Catectecholamines என்ற ஹார்மோன் இதயத் துடிப்பை அதிகமாக்கி, ஆக்சிஜன் தேவை அளவையும் அதிகரிக்க செய்து இதய தசையை பாதிக்கிறது.  

தனியாக வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்டால், சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி, ஹாரன் அடித்து மற்றவர் கவனத்தை ஈர்த்து உதவியைப் பெறலாம்.  

நெஞ்சு வலி இன்றி வரும் மாரடைப்பு Silent Heart Attack. 30% வரை இதய நோயாளிகளுக்கு இவ்வகை ஏற்படுகிறது. | தகவல்: டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி  

Web Stories

மேலும் படிக்க...