Animals understand quirks and interesting facts
Animals understand quirks and interesting facts

விலங்குகள் தப்புவது எப்படி? - வியத்தகு உத்திகள்

Updated on
2 min read

விலங்குகள் இரையாவதும், இரையாகாமல் தப்பிப்பதுமே அவற்றின் வாழ்க்கை முறை. சில விலங்குகள் சில சிறப்பு அம்சங்களை வைத்தே, இரையாகாமல் தப்பும்!

பச்சோந்தி, மரப்பல்லி, பாலைவன பாம்பு போன்ற விலங்கினங்கள் சுற்றியிருக்கும் சூழலுக்கு ஏற்ப தங்களோட நிறத்தை மாற்றிக்கொள்ளும்.
 

மான், கங்காரு போன்றவை கால்களே கேடயம். எதிரிகள் வருவதைப் பார்த்துவிட்டால் போதும், இவை ஓட்டம் எடுத்துவிடும். முயலும் இந்த வகையைச் சேர்ந்ததே. 
 

முயல்கள் நேராக ஓடாமல் இடமும் வலமும் மாறி மாறி ஓடும். இது, துரத்தும் எதிரியை குழப்பும். துரத்தும் விலங்கு ஓயும் வரை, ஓடுவதை நிறுத்தாது.

அணில்கள் மரம் ஏறுவதில் மட்டுமல்ல, ஒளிவதிலும் தேர்ச்சி பெற்றவை. எதிரியை பார்த்துவிட்டால் உச்சாணி கிளைக்குத் தாவிவிடும். 
 

போஸம் எனும் விலங்கு, தந்திரத்தால் தப்பும். சில விலங்குகள், இறந்த விலங்குகளைச் சாப்பிடாது. எதிரியைப் பார்த்ததும் போஸம், இறந்ததுபோல படுத்துவிடும்.

ஓடாமல் எதிரியை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவை சில தேரைகள். எதிரி வந்ததுமே 3 மடங்கு பெரியதாக மாறி எதிரியை ஓடவிடும்.

இதேபோல ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு வகையில் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன. | தொகுப்பு: பிருந்தா சீனிவாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in