kidney stones and health tips
kidney stones and health tips

சிறுநீரகக் கற்கள் உஷார்... A to Z குறிப்புகள்

Updated on
2 min read

சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்த சிறுநீர்க் குழாயிலும் கற்கள் உருவாவது வாடிக்கை. கொஞ்சம் மனது வைத்தால் இந்தத் தொல்லைகளைக் குறைக்க முடியும்.

சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். இதுதான் சிறுநீரகக் கல். 

காரணம்: போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர் வறட்சி, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது போன்றவை ஆகும்.

அறிகுறி: சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும் போது வலி உண்டாகும். அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்கு பரவும்.

சிறுநீரகக் கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் போதும்.
 

வகைகள்: கால்சியம், யூரிக் ஆசிட், சிஸ்டின், ஸ்டுரூவைட் என சிறுநீரகக் கற்கள் நான்கு. இவற்றில் கால்சியம் கற்கள்தான் பலருக்கும் இருக்கும்.

ஒரு முறை கல் உருவாகி, சிகிச்சை பெற்றுச் சரியானவர்களுக்கும் மீண்டும் மீண்டும் கல் உருவாக 50% வாய்ப்பு உள்ளது.

ஒருமுறை அகற்றிய கல்லின் வகையை அறிந்து, அது உருவாக துணைபுரியும் உணவு வகைகளை தவிர்த்துவிட்டால், மீண்டும் கல் ஏற்படுவதை தடுக்கலாம்.
 

சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களைச் சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 
 

2 செ.மீ.க்கும் அதிகமாக உள்ள கற்களை ‘நெப்ரோ லித்தாட்டமி' எனும் முறையில் முதுகில் சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சையில் அகற்றலாம்.

எதைச் சாப்பிடக் கூடாது? - உப்பை குறைக்கணும். காபி, தேநீர், பிளாக் டீ, குளிர் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது.

தினமும் 3-ல் இருந்து 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. | தகவல்: மருத்துவர் கு.கணேசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in