டால்ஸ்டாய் உதிர்த்த 9 மேற்கோள்கள் - எது மகிழ்ச்சி?

ரஷ்ய எழுத்தாளர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதியான லியோ டால்ஸ்டாய் உதிர்த்த 10 சிறந்த மேற்கோள்கள்...

“பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது.”

“எல்லோரும், உலகம் மாறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, தான் மாறவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.”

“ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது.”

“மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைப் பொறுத்ததல்ல, எந்த வழியில் அதனை அணுகுகிறோம் என்பதை பொறுத்ததே.”

“நமக்கு எதுவும் தெரியாது என்று மட்டும் அறிந்துகொள்ள முடிவதே, மனித ஞானத்தின் மிக உயர்ந்த படிப்பு.”

“வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது.”

“வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன.”

“எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை.”

“நான் யார், நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதை அறியாதவரை வாழ்க்கை சாத்தியமற்றதே.”

Web Stories

மேலும் படிக்க...