ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் - ஒரு பார்வை

உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches).  

கறுப்பு (அ) பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பை கொண்டிருக்கும்.

இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது வலி ஏதும் தெரியாதிருக்க இதன் எச்சிலிருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம், கடிக்கின்ற இடத்தை மரத்துப் போகச் செய்துவிடும்.

அட்டை நம்மைக் கடிக்கும்போது நமக்கு எவ்வித வலியும் தெரியாது. அது கடித்து நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி முடித்தவுடன்தான், உணர்வு ஏற்படும்.  

அட்டை கடித்தால் உடனே பயத்தில் அதை அகற்ற முற்படுவோம். அதுபோன்ற நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். கையால் அட்டையைப் பிடித்து இழுத்துவிட முடியும்.    

அட்டை கடித்த இடத்தில் உப்பு, டெட்டால், சோப்பு, எலுமிச்சைச் சாறு, மூக்குப்பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவினால், அட்டை தானே கீழே விழுந்துவிடும்.

உடம்பில் கடித்த அட்டையை அகற்றியவுடன், கடித்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவிட வேண்டும். பொதுவாக அட்டை கடித்த இடத்தில் அரிப்பு ஏற்படும்.

அட்டை கடியை எந்தச் சிகிச்சையும் இன்றி விட்டுவிட்டால், கடித்த புண் ஆறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். தழும்பு எளிதில் மறையாது. | தொகுப்பு: வ.சுந்தர ராஜு

Web Stories

மேலும் படிக்க...