தனித்துவ நடிகர் சுருளிராஜன் - 10 குறிப்புகள்
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் 1938-ல் பிறந்த சுருளி, நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
எளிய மனிதர்களின் தனிப் பெரும் பிரதிநிதியாக திரையில் சுருளிராஜன் வலம் வர அவரது குரல் முக்கியப் பங்காற்றியது.
நகைச்சுவையை மையப்படுத்தும் குணச்சித்திரம் என்பதே நடிகர் சுருளிராஜனின் அடையாளம்!
1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 படங்களில் ஓய்வு, ஒழிச்சலின்றி நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் சுருளிராஜன்.
சுருளி ஏற்ற வேடங்களில் அடித்தட்டு மக்களைப் பிரதிபலிப்பவை அதிகம். இதனால் ஏழை, நடுத்தர மக்களிடம் செல்வாக்கு பெருகியது.
சுருளி நடிக்க வந்தபோது அவரது வயது 27. ஆனால், அவருக்குக் கிடைத்த வேடங்கள் அவரது வயதை மீறிய முதிய வேடங்கள்.
நகைச்சுவை நாயகனாகவும் சுருளிராஜன் விட்டுச்சென்ற அடையாளங்கள் பல. அவற்றில் ஒன்று
‘மாந்தோப்பு கிளியே’ படத்தில் சுருளி ஏற்ற கஞ்சப் பிரபு வேடத்தை அவரின் ‘மாஸ்டர் பீஸ்’ எனலாம்.
‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பொதுக் கழிவறையைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளராக முதலில் நடித்தவர் சுருளிதான்.
புகழின் உச்சியில் இருந்த சுருளிராஜன் 42 வயதில் மறைந்தார். அவரது கதாபாத்திரங்கள் என்றும் காலத்தால் அழியாதவை!