ஹென்றி ஃபோர்டின் 10 வெற்றி மொழி!
ஃபோர்டு மோட்டார் கம்பெனியை நிறுவியவரும், அமெரிக்காவின் வெற்றிகரமான தொழிலதிபருமான ஹென்றி ஃபோர்டு உதிர்த்த வெற்றி மொழிகள் இவை...
“எல்லாவற்றுக்கும் முன்னால் வெற்றியைப் பெற தயாராவதுதான் வெற்றியைப் பெறுவதற்கான முதல் படி!”
“சும்மா குறை சொல்லாதீர்கள். தீர்வைச் சொல்லுங்கள்!”
“பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் சம்பாதிக்காத தொழில் ஒரு தோல்வியடைந்த தொழிலே!”
“நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்று நினைப்பதை வைத்து உங்களுடைய மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியாது.”
“பெரும்பாலானோர் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில் செலவிடும் நேரத்தை விட மிகக் குறைவான நேரத்தையே அதை தீர்ப்பது குறித்து சிந்திப்பதற்குச் செலவிடுகின்றனர்.”
“சிந்திப்பது என்பது மிகவும் கடினமான வேலை. அதனாலேயேதான், மிகச் சிலரே அந்த வேலையைச் செய்கின்றனர்.”
“தொழிலில் பெரிய பிரச்சினைகள் என ஒன்றுமே இல்லை. பல சின்னச் சின்ன பிரச்சினைகள்தான்.”
“ஒரு செயலை உங்களால் செய்ய முடியும் அல்லது முடியாது என உறுதியாக நீங்கள் நம்பினீர்கள் என்றால் அதுவே சரியானதாகும்.”
“தொழிலதிபர்களுக்கு ஒரே ஒரு விதிதான். சிறந்த தரமான பொருட்களை குறைந்த விலையில் அதிக அளவிலான கூலி கொடுத்து தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது.”
“அடுத்த வருடம் உலகம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று கற்றுக்கொள்ள முடியாது.”