சென்னையும் 10 படங்களும் - ஒரு பார்வை
மே மாதம்: சென்ட்ரல், அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், எல்ஐசி, லைட் ஹவுஸ், மெரினா, ரிப்பன் மாளிகை, மகாபலிபுரம் என இப்படம் சென்னையை அழுத்தமாக பதிவு செய்தது.
ஆயுத எழுத்து: படத்தின் பெரும்பாலான காட்சிகள் நேப்பியர் பாலத்தை சுற்றியே நிகழும். படத்தில் டபுள் டக்கர் பேருந்தை பார்ப்பது நாஸ்டால்ஜி உணர்வு.
சென்னை 28: ஹவுஸிங் போர்டு குடியிருப்பு, சென்னையின் மைதானங்கள், இளைஞர்களின் வாழ்க்கை என ஜாலியான படைப்பு.
அங்காடித் தெரு: சுறுசுறுப்பான தி.நகரின் அழகில் ஒளிந்திருக்கும் அழுக்குகளை உரித்து காட்டிய இப்படம், சென்னையின் முக்கியமான பதிவு.
மெரினா: மெரினா கடற்கரையின் ஈரத்தையும், மணலின் வெப்பத்தையும், இரவு நேர உலகத்தையும், அழுத்தமாக பதிவு செய்தது.
மெட்ராஸ்: வடசென்னை மக்களின் வாழ்வியலை கொண்டாட்டத்துடன் நிலவியல் தன்மை மாறாமல் இயல்புடன் பதிவு செய்த படம்.
காக்கா முட்டை: இறுக்கமான கட்டிடங்கள், தீப்பெட்டி போன்ற வீடுகள், கூவம் ஒட்டிய குடியிருப்புகளை உண்மைக்கு நெருக்கமாக காட்டிய முக்கியமான படைப்பு.
தரமணி: தென் சென்னை, டைட்டில் பார்க், ஓஎம்ஆரைச் சுற்றி புற்றீசலாக வளர்ந்து நிற்கும் ஐடி கட்டிடங்கள் மற்றும் அந்த பகுதியின் வாழ்வியலையும் பேசியது.
மாநகரம்: இரவு நேர சென்னையின் அமைதியை இயல்புடன் பதிவு செய்த இப்படம், போலி பிம்பத்தையும் நீக்கியது.
வட சென்னை: எண்ணூர் துறைமுகம் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள், உழைக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களின் குடியிருப்புகளை பதிவு செய்தது.