First 2 Phase Elections and Women Candidates
First 2 Phase Elections and Women Candidates

முதல் 2 கட்ட தேர்தலும் பெண் வேட்பாளர்களும் - ஒரு பார்வை

Updated on
2 min read

மக்களவைக்கு நடைபெற்ற முதல் 2 கட்ட தேர்தலில், வெறும் 8 சதவீத பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர்.

முதல் இரண்டு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 2,823 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 235 பேர் பெண்கள். இது வெறும் 8 சதவீதம் மட்டுமே.

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கேரளாவில் நடபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 24 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முதல் இரண்டு கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 44 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது.

முதல் இரண்டு கட்ட தேர்தலிலும் பாஜக 69 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியது.

பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அரசியல் ஆர்வலர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் சுசிலா ராமசாமி கூறுகையில், ‘‘

“பெண் வேட்பாளர்களை அதிகம் முன்னிறுத்த கட்சிகளிடம் ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை” என்கிறார் டெல்லி பல்கலை.யில் பணிபுரியும் டாக்டர் சுசிலா ராமசாமி.

“அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்க சீர்திருத்தம் தேவை” என்கிறார் அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் டாக்டர் இப்திகர் அகமது அன்சாரி.

பாஜக, காங்கிரஸும் தேர்தல் அறிக்கையில் பெண்களை மையப்படுத்தி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ஆனால், போதிய அளவில் பெண் வேட்பாளர்கள் இல்லை.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசியல் கட்சிகளின் தயக்கத்தை காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“அரசியல் களத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in