‘ராகுல்யான்’ முதல் ‘தடுப்பு முகாம்’ வரை | மைக் டெஸ்டிங்

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் தைரியம் ஜம்மு காஷ்மீரில் இன்று யாருக்கும் இல்லை.” - அமித் ஷா

“இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, மத்தியில் ஆளும் பாஜக 150 தொகுதிகளைக் கூட தாண்டாது.” - ராகுல் காந்தி

“கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் இளம் தலைவரின் அறிமுகம் இன்னும் நிகழ்த்தப்படவில்லை. காங்கிரஸின் ‘ராகுல்யான்’ இன்னும் எங்கும் நிலைநிறுத்தப்படவில்லை.” - ராஜ்நாத் சிங்

“பாஜக உடனான காங்கிரஸின் போட்டி என்பது தேர்தல் அரசியல், அதிகாரப் போட்டியாகவே உள்ளது. கருத்தியல் ரீதியாக இல்லை. பாஜகவின் ‘பி’ டீமாக சீரழிகிறது காங்கிரஸ்.” - பினராயி விஜயன்

“நம் நாடு ‘உண்மை’யை வழிபடுமே தவிர, அதிகாரத்தை அல்ல. ஆனால், மோடி ‘அதிகாரம்’ ஒன்றை மட்டுமே நேசித்து வழிபடுகிறார்” - பிரியங்கா காந்தி

“60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்!” - பிரதமர் மோடி

“நாடு தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது.” - ப.சிதம்பரம்

“பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூட ‘சிறுபான்மையினர்’ என்ற வார்த்தையை குறிப்பிட மறுக்கிறது” - அசாசுதீன் ஒவைசி

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. பாஜகவினர் ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக ஆக்கிவிட்டனர்.” - மம்தா பானர்ஜி

Web Stories

மேலும் படிக்க...