ராகுல் ‘பண’ கணக்கு, அண்ணாமலை கோபம், மம்தா சூளுரை மற்றும் பல... | மைக் டெஸ்டிங்

“பல நூற்றாண்டு கால விடாமுயற்சி, தியாகத்தின் உச்சம் தான் அயோத்தி ராமர் கோயில். இந்தியாவின் தேசிய உணர்வில் ஸ்ரீராமரின் பெயர் பதிந்துள்ளது.” - பிரதமர் மோடி

“நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.” - ராகுல் காந்தி

“சினிமா மேல் எந்த கோபமும் இல்லை. சினிமாவை ‘மாமன்னன்’ போன்ற பிரச்சார திரைப்படத்தை எடுக்க பயன்படுத்தினால், அதை கேட்க வேண்டிய நேரம் இது.” - அண்ணாமலை

“சென்னை தி.நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு வருகை தந்த மக்களை காவல் துறை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது.” - தமிழிசை சவுந்தராஜன்

“இந்தத் தேர்தலில் நல்லவர்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கேட்டு வருவது பெருமையாக உள்ளது. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.” - கமல்ஹாசன்

“வெள்ளத்தின்போது மக்கள் உடன் பாஜக நிற்கவில்லை. அதனால்தான் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு மக்கள் செல்லவில்லை.” - தமிழச்சி தங்கபாண்டியன்

“நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. நான் ஓட்டுக்கான ஆள் இல்லை. நாட்டுக்கான ஆள்.” - சீமான்

“திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.” - எல்.முருகன்

“அதிமுகவுக்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதால், இந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு வேலையே கிடையாது.” - ப.சிதம்பரம்

“திமுக அரசு போதைப்பொருட்களை தடுக்காமல் கிளி ஜோதிடரை கைது செய்து கொண்டிருக்கிறது.” - அன்புமணி ராமதாஸ்

“தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் 2-ம் இடத்தை கைப்பற்ற அதிமுக, பாஜக போட்டி.” - ஜி.ராமகிருஷ்ணன்

“பிரதமர் மோடி தமிழகம் வருவதைப் போன்று மணிப்பூருக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.” - கார்த்தி சிதம்பரம்

“ஓ.பன்னீர்செல்வத்தையும், என்னையும் வீழ்த்த திமுகவும், பழனிசாமியும் மறைமுக கூட்டணி” - டி.டி.வி. தினகரன்

“சிஏஏ விவகாரத்தில் மேற்கு வங்க மக்களை முதல்வர் மம்தா பானர்ஜி தவறாக வழிநடத்துகிறார்.” - அமித் ஷா

“குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஒருபோதும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்.” - மம்தா பானர்ஜி

Web Stories

மேலும் படிக்க...