வார்த்தைப் போர் @ கச்சத்தீவு விவகாரம்

“யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்தது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக் கூடாது என்பது மக்களின் மனதில் உறுதியாகி இருக்கிறது” - பிரதமர் மோடி

“திமுக அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கசசத்தீவு (1974, 1976 ஒப்பந்தங்கள்) இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்.” - முதல்வர் ஸ்டாலின்

“கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? இவ்வளவு காலம் அமைதி காத்தது ஏன்? தமிழகத்தில் பாஜக தோல்வி முகம் காண்பதால் இப்படிப் பேசுகிறார்.” - காங்கிரஸ் நிர்வாகி சந்தீப் தீக்‌ஷித்

“கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பான ஆர்டிஐ தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலமானது. திமுகவும் காங்கிரஸும் தங்கள் குடும்பம் மீது மட்டுமே அக்கறை கொண்டவை” - பிரதமர் மோடி

“காங்கிரஸ் கட்சியினர் கச்சத்தீவை விரும்பி தாரைவார்த்தனர். அதற்காக அவர்களுக்குக் கைதட்டியே பாராட்ட வேண்டும். அந்தச் செயலுக்காக அவர்கள் கொஞ்சமும் வருந்தவில்லை.” - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

“தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

“பத்து ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.” - முதல்வர் ஸ்டாலின்

“27.1.2015 ஆர்டிஐ பதிலில், இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கிய சூழல் நியாயப்பட்டது. ஆனால், இப்போது வெளியுறவு அமைச்சகமும் அமைச்சர் ஜெய்சங்கரும் அந்தர் பல்டி அடிப்பது ஏன்?” - ப.சிதம்பரம்

“தமிழர்களின் கச்சத்தீவை அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்த காங்கிரஸ் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான தீய சக்தியாகும்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

“கச்சத்தீவுக்கு திமுக துரோகம் செய்தது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

“கச்சத்தீவு பிரச்சினையை தேர்தலுக்காக மோடியும், அண்ணாமலையும் தற்போது பேசுகின்றனர். அப்படியே குஜராத், மணிப்பூர் கலவரம் பற்றி ஆர்டிஐ எடுத்து தரச் சொல்லுங்கள்.” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” - பாமக நிறுவனர் ராமதாஸ்

"கச்சத்தீவு பிரச்சினையில் காங்கிரஸ் - திமுகவின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது. பாஜக வெளியிட்ட ஆதாரங்களால் பயத்தின் பிடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Web Stories

மேலும் படிக்க...