‘பணமில்லா’ நிர்மலா சீதாராமன் முதல் ‘குத்தகை’ பாமக வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 28, 2024

“நாடாளுமன்றத்தில் கோவை தொகுதி மக்களின் குரலாக எனது குரல் ஒலிக்கும்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடுக்கு நாங்கள் எதிரி அல்ல. இதை அமல்படுத்தினால் வன்னிய மக்களுக்குதான் நஷ்டம்.” - அமைச்சர் எ.வ.வேலு

“விருதுநகர் தொகுதிக்கு உங்கள் சித்தி வந்துள்ளேன். உங்களின் அனைத்து வசதிகளையும் டெல்லியில் வாதாடி வாங்கித் தருவேன்” - பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

“புதிய சின்னத்தை குறைந்த நாளில் மக்களிடம் சேர்ப்பது கடினம் என்பதால் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகிறேன்.” - தென்காசி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

“சமூக நீதியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதற்காக போராடி வரும் ஒரு கட்சி பாமக மட்டும்தான்” - பாமக நிறுவனர் ராமதாஸ்

“தமிழகத்துக்கு பிரதமர் மோடி தேர்தல் நேரத்தை தவிர எத்தனை முறை வந்துள்ளார்?” - திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது.” - சின்னம் விவகாரத்தில் மதிமுக திருச்சி வேட்பாளர் துரை வைகோ

‘ப்ரீத்திக்கு நான் கேரன்டி’ என்று ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர், ‘இது மோடியின் கேரன்டி’ என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். - முதல்வர் ஸ்டாலின்

“என்னிடம் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கான பணம் இல்லை.” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“குடும்பத்தை வளமாக்க வேண்டும் என்பதற்காக கொள்ளையடிப்பதே திமுகவின் குறிக்கோள்” - அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி

“நான் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது கிளம்பிச் சென்றால், அவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.” - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

“ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்?” - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Web Stories

மேலும் படிக்க...