இபிஎஸ் பதிலடி முதல் அண்ணாமலை ‘லாஜிக்’ வரை - மைக் டெஸ்டிங் @ மார்ச் 27, 2024

“கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை பாஜக இம்முறை பெறாது. இது அவர்களுக்கும் தெரியும்.” - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

“பிரதமரிடம் பேசும்போது நீங்கள் தான் (ஸ்டாலின், உதயநிதி) பல்லைக் காட்டியுள்ளீர்கள். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை.” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“பாஜக ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் உறங்க மாட்டோம். உங்களை உறங்க வைக்கும் வரை எங்கள் பணி தொடரும்.” - திமுக அமைச்சர் உதயநிதி

“அண்ணாமலைக்கு பல ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தகர பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததாக பொய் பேசுகிறார்.” - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன்

“இபிஎஸ் காங்., திமுகவை விமர்சிக்கிறார். பாஜகவை விமர்சிக்கவில்லை. அவருக்கு பாஜகவுடன் ரகசிய உறவு இருக்கிறது.” - காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம்

“தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. ஆனால், நாம் தற்போது எதிர்க்க வேண்டியது பாஜக அணி.” - விசிக தலைவர் திருமாவளவன்

“பாஜக வேட்பாளர் ராதிகாவின் மகளும், நானும் ஒன்றாகப் படித்தோம். அதனால், அவர் என்னை மகன் என்றார். சினிமா நட்பு வேறு, அரசியல் வேறு.” - விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

“அதிமுக போட்ட பிச்சையால் தமிழகத்தில் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.” - அதிமுக எம்.பி சி.வி.சண்முகம்

“சவுமியா அன்புமணி வாரிசு அரசியலுக்குள் வர மாட்டார். அவர் பசுமை இயக்கத்துக்காக பணியாற்றி உள்ளார்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக போனில் தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் ஏமாற்றி விட்டார்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Web Stories

மேலும் படிக்க...