லாலு Vs மோடி முதல் சீமான் Vs அண்ணாமலை வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 4, 2024

“குடும்ப ஆட்சியை நான் எதிர்ப்பதால், மோடிக்கு குடும்பமே இல்லை என்கின்றனர். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான்!” பிரதமர் மோடி

“பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? மோடிக்கு குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” - பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்

“அதிமுக கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வந்தால், அவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். வரவில்லை என்றால் டோன்ட் கேர்!” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

“தமிழக மக்கள் ஒருபோதும் மோடியைப் பார்த்து ஏமாற மாட்டார்கள். திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள்” - முதல்வர் ஸ்டாலின்

“தமிழகத்தில் திமுக கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர்” - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

“நாங்கள் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்; மக்களும் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

“வங்கதேசம், பூடான் நாடுகளைவிட இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” - காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்” என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

“நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. 6% வாக்கு, 2 சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது ஒரு மக்களவை உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டும்” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த முறையாவது சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்து கூட்டணி மாறாமல் இருக்க ஆல் தி பெஸ்ட்” - ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ்

“தமிழக அரசின் திட்டங்கள் குறித்து உண்மைக்கு மாறாக பேசும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி பயத்தால் வாயால் வடை சுடுகிறார்” - அமைச்சர் கீதாஜீவன்

Web Stories

மேலும் படிக்க...