பாஜக Vs காங்கிரஸ் - வருவாயும் செலவும்!
2022-23-ம் ஆண்டில் பாஜக வருவாய் ரூ.2,360.84 கோடி.
2022-23-ம் ஆண்டில் ரூ.1,361.68 கோடியை பாஜக செலவு செய்துள்ளது.
பாஜக வருவாயில் 80% (ரூ.1,092.15 கோடி) செய்தவை தேர்தல் செலவுகள்.
பாஜக விளம்பரத்துக்கு செய்த செலவு ரூ.432.14 கோடி.
பாஜக வருவாயின் பெரும் பகுதி, தேர்தல் பத்திரங்களாக வந்துள்ளன.
பாஜக பெற்ற நன்கொடை ரூ.2,120.06 கோடியில் 61% (ரூ.1,294.14 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்தன.
கடந்த 2022-2023-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.2,800.36 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது.
2022-2023-ம் ஆண்டில் மொத்தம் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 46 சதவீதம் பாஜக கட்சி பெற்றுள்ளது.
2-ம் இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 2022-23-ம் ஆண்டில் ரூ.452.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி 2022-23-ம் ஆண்டில் செய்த செலவு ரூ. 467.13 கோடி.
பாரத் நடைபயணத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.71.83 கோடி செலவு செய்துள்ளது.
பாஜகவுக்கு 2022-23-ல் கிடைத்த நன்கொடை தொகை, காங்கிரஸுக்கு கிடைத்த நன்கொடையை விட 5 மடங்கு அதிகம்.