அலையாத்திக் காடுகள் வகைப்படுத்துதல்: ஒரு பார்வை

சுரபுன்னைக் காடுகள்: அலையாத்திக் காடுகளில் ஒரு வகை சுரபுன்னை மரங்கள். இவை கூந்தல் போன்று இலைகள் தடித்து , ஒருவகை நறுமணத்தையும் கொண்டிருக்கின்றன.

அலையிடைக் காடுகள்: இடைப்பகுதிகளில் உவர் நீரும், ஆறுகள் மூலம் வந்தடையும் நன்னீரும் சேர்ந்து ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதால், அலையிடைப் பகுதிகளில் இக்காடுகள் நன்கு வளர்கின்றன.

தில்லைக் காடுகள்: தில்லை என்கிற மர வகைகள் சிதம்பரம் பகுதியில் உள்ள கழிமுகப் பகுதிகளில் உள்ளன. இவற்றின் இலைகள் பார்ப்பதற்கு ஆலமரத்தின் இலைகள்போல் காணப்படும்.

சுந்தரவனக் காடுகள்: அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களுக்குச் சுந்தர மரங்கள் என்று பெயர். அழகிய தோற்றத்தால், சுந்தரவனக்காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது.

மூச்சு வேர் காடுகள்: அலையாத்திக் காடுகளின் தாவர வேர்கள் கடல் நீருக்கு மேலே நீண்டு காணப்படும். வளிமண்டலக் காற்றை நேரடியாக உறிஞ்சுவதால் இவை மூச்சு வேர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

கடல் பாதுகாப்புக் காடுகள்: கடல் பூகம்பங்கள், தீவிர புயல், ஆழிப் பேரலை போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கும் அரண்களாக அலையாத்திக் காடுகள் திகழ்கின்றன.

அதிசயக் காடுகள்: கடல் நீரை உறிஞ்சி இலைகள் வழியாக உப்பினை வெளியேற்றுகின்றன. சிறப்பு வாய்ந்த உப்பு நாளங்கள் இத்தாவர இலைகளில் உள்ளதால் இவை அதிசயக் காடுகள்.

Web Stories

மேலும் படிக்க...