Sachin Tendulkar scores his 100th hundred in 2012 on this day
Sachin Tendulkar scores his 100th hundred in 2012 on this day

சச்சின் 100-வது சதம் கண்ட தருணம்!

Updated on
2 min read

கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்த இந்த 100-வது சதம்.

சச்சின் டெண்டுல்கரால் இந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்த சாதனை யாராலும் தகர்க்கப்படவில்லை.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார்.

‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படும் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த நூறாவது சதம் இதே நாளில் (மார்ச் 16) கடந்த 2012-ல் பதிவு செய்யப்பட்டது.

வங்கதேச அணிக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் சச்சின், 147 பந்துகளில் 114 ரன்கள். 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர். 138 பந்துகளை எதிர்கொண்டு சதம் கடந்தார்.

“இது எனக்கு மிகவும் கடினமான காலம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எனது 99 சதங்கள் குறித்து யாரும் பேசவே இல்லை. ஆனால், இந்த 100-வது சதம் குறித்துதான் நான் செல்லும் இடமெல்லாம் பேச்சு.” - சச்சின்

“அணிக்காக ரன் சேர்க்க வேண்டும் என்பது எனது பணி. உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென்ற எனது கனவு 22 ஆண்டுகளுக்கு பிறகுதான் நிறைவேறியது” - சச்சின்

1989 முதல் 2013 வரை 24 ஆண்டுகள். 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள். அதில் 34,357 ரன்கள், 100 சதங்கள் மற்றும் 201 விக்கெட்டுகளை என சச்சின் கைப்பற்றி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in