குளிர்காலம்... கர்ப்பிணிகள் கவனத்துக்கு!

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாகப் பேணுவது குறித்து மகப்பேறு டாக்டர். சரண்யா.எஸ் தரும் ஆலோசனைகள் சில...

தண்ணீர் குடிக்கவும்: குளிர்காலத்தில் தாகம் குறைந்து தண்ணீர் குடிப்பது குறைந்து விடும். மேலும் குளிர்ந்த காற்றினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது மிகவும் அவசியம்.

சமச்சீர் உணவு: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் உண்ணும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தங்களை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள அதிகமாகப் பழம், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

ஃபுளூ தடுப்பூசி: கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால், இந்த காலகட்டத்தில் எளிதில் தாக்கக் கூடிய ஃபுளூவை எதிர்கொள்ள அதற்கான தடுப்பூசி அவசியம். இது தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

சுறுசுறுப்பு அவசியம்: கர்ப்பகாலத்தில், உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். நடைப்பயிற்சி, யோகா, கர்ப்பகால-பிசியோதெரபிஸ்ட் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி ஆகியவற்றினை மேற்கொள்ளலாம்.

குளிர் தவிர்க்கும் உடை: குளிரிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய ஆடைகளை அணிவது உங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக்க உதவும். முடிந்த வரை பருத்தி கால் உறைகளை அணிய வேண்டும்.

மகிழ்ச்சி முக்கியம்: கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பிரசவத்தை அனுபவிக்க இதுவே சிறந்த வழி.

Web Stories

மேலும் படிக்க...