களைப்பு வராமல் தடுக்க 10 வழிகள்

நம்மில் பலருக்கும் சில வேளைகளில் களைப்பு (Fatigue) ஏற்படுவதுண்டு. இதைத் தடுக்கும் எளிய வழிகளை அடுக்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்

அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் இருக்கிற இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிக்க வேண்டும்.

தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். முடியாதவர்கள் வார இறுதி நாட்களிலாவது ஓய்வு எடுக்க வேண்டும்.

உடல் பருமனாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க வேண்டும். சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள். காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள்.

தினமும் காலையில் நடைப் பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.

வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்யவேண்டியதும் முக்கியம்.

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஏசி அறைகளில் பணிபுரிவோருக்கு நீரிழப்பு ஏற்படுவது கோடைக்காலத்தில் வெளியில் தெரியாது. அவர்களும் தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அருந்தவேண்டும்.

காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். புகை பிடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். மது அருந்த வேண்டாம்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.

Web Stories

மேலும் படிக்க...