10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்க 10 படங்கள்!

10 ஆண்டுகளில் கவனிக்கத்தக்க 10 படங்கள் | 2011 - ஆரண்ய காண்டம்: சிக்கலற்ற ‘நான் - லீனியர்’ திரைக்கதை, தேய்வழக்குகளை உதறிய கதாபாத்திர வார்ப்பு என பல தளங்களில் கட்டுடைத்தலை நிகழ்த்திய ‘கேங்ஸ்டர்’ படம்.

2012 - அட்டகத்தி: புறநகர் சென்னையின் வாழ்க்கை, அங்கே அதிகமாய் வாழும் பூர்வக்குடி மக்கள், அவர்களது இசை என பெரும் திருப்பங்களை நம்பியிருக்காத எளிய திரைக்கதை வழியே வசீகரித்த மண்ணின் சினிமா.

2013 - சூது கவ்வும்: கதாபாத்திரங்களை எழுதிய விதம், சமகால வாழ்க்கையைப் பிரதிபலித்த அவல நகைச்சுவை வசனங்கள் ஆகியன கால ஓட்டத்தில் இன்று அது ஒரு ‘கல்ட் கிளாசிக்’ படமாக மாறிவிட்டது.

2014 - ஜிகர்தண்டா: மையக் கதாபாத்திரம் என்கிற ஒன்று இல்லாமல், நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போனதன் மூலம் ‘மாஸ்’ தருணங்களைக் காட்டினார் கார்த்திக் சுப்பராஜ்.

2015 - காக்கா முட்டை: இரண்டு ஏழைச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஏங்குகிறார்கள். அவர்கள் வழியாக, உலகமயமாதல் கொண்டுவந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வை மௌன சாட்சியாக நின்று பதிவு செய்தது.

2016 - விசாரணை: ‘அதிகார வர்க்கத்தின் அடியாள்’, ‘ஏவல் துறை’ என்றெல்லாம் காலம்தோறும் காவல் துறை மீது வைக்கப்பட்டு வரும் கடும் விமர்சனத்தின் பின்னால் இருக்கும் உண்மையை உரசிக் காட்டிய படம்.

2017 - அறம்: செயற்கைகோள்களை ஏவும் நாட்டில், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக் குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க உருப்படியான கருவிகள் இல்லையே என்கிற வேதனையை அறச் சீற்றத்தோடு பேசியது.

2018 - பரியேறும் பெருமாள்: சாதியின் பெயரால் ஒரு பகுதி மக்கள் பல விதங்களில் ஒடுக்கப்படுவதை, அதிலிருந்து மீண்டெழுந்து சுயமதிப்பைக் காத்துக்கொள்ள கல்வி உதவும் எனத் திடமாக நம்பும் இளைஞனின் வாழ்க்கை.

2019 - டுலெட்: பாடல்கள், பின்னணி இசையின்றி, களத்தின் இயல்பான ஒலிகளும் ஒளிப்பதிவும் என இயக்குநரின் படைப்பாக்க அணுகுமுறையால் தமிழில் ஓர் உலக சினிமா சாத்தியமானது.

2020 - சூரரைப் போற்று: ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எழுதுபவர்களுக்கு வலுவான கோணமும் அணுகுமுறையும் அவசியம். அதில் தனித்து நின்றது ‘சூரரைப் போற்று’. | by ஜெயந்தன்

Web Stories

மேலும் படிக்க...