

வடோதராவில் உள்ள தாண்டியா பஜார் பகுதியில் நரேந்திர மோடியின் தேர்தல் விளம்பர சுவரொட்டியின் மீது அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி தனது சுவரொட்டியை ஒட்ட முயன்றார். இதனால் மிஸ்திரி உள்ளிட்ட காங்கிரஸாரை கைது செய்த போலீஸார், அவர்கள் அனைவரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
வடோதரா முழுவதும் பேனர்களை பாஜகவினர் வைத்துள்ளனர். விளம்பரத்துக் காக அனைத்துப் பகுதிகளையும் மோடியின் ஆதரவாளர்கள் ஆக்கிர மித்துள்ளனர். இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தொடர்பான விளம்பரங்களை செய்ய முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில், மோடியின் பேனர்களை அகற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியும், நகராட்சி அதிகாரியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது கோரிக்கையை ஏற்காவிட்டால், மோடியின் பேனர் மீது போஸ்டர் ஒட்டுவேன் என்று மிஸ்திரி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தாண்டியா பஜார் பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் பேனர்களை பாஜகவினர் தொங்கவிட்டிருந்தனர். அந்த பகுதிக்கு வியாழக்கிழமை வந்த காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி உள்ளிட்ட தொண்டர்கள், ஏணியின் மூலம் மின் கம்பத்தின் மீது ஏறி, மோடி பேனர் மீது தங்களின் சுவரொட்டியை ஒட்ட முயன்றனர். அப்போது, மிஸ்திரியை தேர்தல் விளம்பரம் செய்யவிடாமல் தடுப்பதாக மோடிக்கும், பாஜக விற்கும் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல் துறை துணை ஆணையர் திபாங்கர் திரிவேதி கூறுகையில், “காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி, வடோதரா நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கஸ்தூர், அக்கட்சியைச் சேர்ந்த நரேந்திர ராவத் மற்றும் தொண்டர்கள் சிலரை தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப் பட்டுள்ள வீடியோக்களை பார்த்த பின்புதான் முடிவு செய்ய வுள்ளோம்” என்றார்.
இதுகுறித்து மதுசூதன் மிஸ்திரி கூறியதாவது: “காவல் துறையினரும், மாவட்ட நிர்வாக மும் பாரபட்சமான முறை ஒயில் செயல்படுகின்றனர். சாலைக ளில் தேர்தல் தொடர்பான விளம்பரத்தைச் செய்யவிடாமல் எங்களை தடுக்கின்றனர்” என்றார்.