சிவகங்கை தொகுதியில் சிவப்புக் கம்பளம் யாருக்கு?
சிவகங்கை தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கப் போகும் சக்தியாக சிறிய கட்சிகளான தவெக, நாதக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பி.ஆர்.செந்தில்நாதன், திமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் நடிகர் கருணாஸ், தவெக சார்பில் குழந்தை ராணி நாச்சியார், நாம் தமிழர் கட்சி சார்பில் இந்துஜா உட்பட 17 பேர் போட்டியிடுகின்றனர்.
நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், 4 பேருமே முக்குலத்தோர் சமூகத்தினர் என்பதாலும், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் போட்டி யிடுவதாலும் முக்குலத்தோர் வாக்குகள் சிதறுகின்றன.
இதனால் பிற சமூகத்தினர் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக மாறி யுள்ளது. இத்தொகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை பிரதா னமாக உள்ளது. சிவகங்கை அதிமுக வசம் இருந்ததால் 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தொகுதி யாகவே இருந்தது. இது திமுகவுக்கு பின் னடைவாக உள்ளது.
அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் அனைவராலும் எளிமையாக அணுகக் கூடியவர். அதிமுக தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றதால், அக்கட்சியினர் சிவகங்கையை தங்களது கோட்டை என்கின்றனர். தனக்கு தான் சீட் கிடைக்கும் என்று ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார் பி.ஆர்.செந்தில்நாதன்.
2016-ல் திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற கருணாஸ், அங்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அதிமுகவினர் கடும் விமர்சனம் செய்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம், அமமுக வாக்குகள் கை கொடுக்கும் என அதிமுகவினர் நம்பு கி்ன்றனர்.
திமுக வேட்பாளர் கருணாஸூக்கு கூட்டணி கட்சிகள் பெரும்பலமாக உள்ளன. நான் வென்றால் முதல்வரை எளிதில் சந்தித்து திட்டங்களை கொண்டு வருவேன் என்று பிரச்சாரம் செய்கிறார்.
சிவகங்கை தொகுதியை பெற திமுக, காங்கிரஸார் கடும் முயற்சி எடுத்தனர். ஆனால், கருணாஸூக்கு ஒதுக்கியதால், திமுக, காங்கிரஸ் தரப்பினர் தேர்தல் பணியில் மந்தம் காட்டுகின்றனர்.
இதனால் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரில் வந்து, திமுக நிர்வாகிகளை சந்தித்து கருணாஸை வெற்றிபெற வைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். கூட்டணி கட்சியினர் எந்தளவுக்கு ஒத்து ழைப்பு கொடுக்கின்றனர் என்பதை பொருத்தே அவரது வெற்றி வாய்ப்பு அமையும் எனக் கூறப்படுகிறது.
தவெக வேட்பாளர் குழந்தைராணி நாச்சியார் சிவகங்கையில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். விஜய் ஆசியும், தவெகவினர் உள்ளூர் பிரச்சினையை மையப்படுத்தி ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கியதும் அவருக்கு பலம்.
நாம் தமிழர் கட்சி வேட் பாளர் இந்துஜாவுக்கு தமிழ் உணர்வாளர்களின் வாக்குகள் கிடைக்கும். மேலும் பக்கத்து தொகுதியான காரைக்குடியில் சீமான் போட்டியிடுவதால், அதன் தாக்கம் சிவகங்கையிலும் இருக்கிறது.
கிராமங்களிலும் அவர்களுக்கு ஆதரவு இருக்கிறது. கடந்தமுறை போட்டியிட்ட நாதக வேட் பாளர் மல்லிகா 22,500 வாக்குகள் பெற்றார் என்பது குறிப் பிடத்தக்கது. சசிகலா கட்சி தரப்பில் குரு.முருகானந்தம் போட்டியிடுகிறார்.
இவரும் முக்குலத் தோர் வாக்குகளை குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார். இந்த முறை சிறிய கட்சிகள் பெறப்போகும் வாக்குகள் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்கான வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சூழல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.