தவெகவுக்கு ‘விசில்’ சின்னம்... விஜய்க்கு இது ‘முதல் வெற்றி’ ஏன்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரு துருவங்களாக இருந்த தமிழக அரசியலில், தற்போது விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்' (மூன்றாவது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இதற்கிடையில், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் ஆணையத்திடம் 10 விருப்பச் சின்னங்களைப் பட்டியலிட்டு வழங்கியிருந்தனர். தற்போது அந்த நீண்ட காத்திருப்புக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் விடை கிடைத்துள்ளது. தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்படுவதே வழக்கம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி முறையாகக் கணக்குகளைத் தாக்கல் செய்ததாலும், கட்சியின் வலுவான முன்னெடுப்புகளாலும், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ‘விசில்’ சின்னமே பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவெக-வின் முதல் அரசியல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே விஜய்யை சந்தித்துப் பேசியதோடு, தேர்தலுக்குப் பின் அமையும் ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும் என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பொடிவைத்து பதிவு போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி புறப்பட ஆயத்தமாகி விட்டன,’ என குறிப்பிட்டுள்ளார்.

தவெகவுக்கு ‘விசில்’ சின்னம்... விஜய்க்கு இது ‘முதல் வெற்றி’ ஏன்?
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in