பாஜக ‘டிக்’ செய்த தொகுதிகளும், புது ‘ஃபார்முலா’ பின்னணியும்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. அதில் கன்னியாகுமரியில் 4 தொகுதிகள், புதுக்கோட்டையில் 3 தொகுதிகள், சிவகங்கை மற்றும் திருப்பூரில் தலா 2 தொகுதிகளில் பாஜக களமிறங்கிறது. தமிழகம் முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக பாஜக சொல்லிக்கொண்டாலும், தற்போது பெற்றுள்ள தொகுதிகளின் அடிப்படையில் அந்தக் கட்சி, தென் மாவட்டங்களில்தான் அதிகம் போட்டியிடுகிறது. மற்றபடி, மத்திய மண்டலம், வட மண்டலம், சென்னை மண்டலத்தில் பாஜக மிக சொற்ப என்ணிக்கையில்தான் தொகுதிகளைப் பெற்றுள்ளது.

பெரும்பாலும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையே பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளைப் பெற்ற பாஜக வெறும் 4 தொகுதிகளில்தான் வென்றது. அதிலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்திலும், கோவை தெற்கில் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்திலும் தான் வென்றார்கள். எனவே இம்முறை, எப்படியாவது இரட்டை இலக்க வெற்றியைப் பெறவேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் பாஜக தொகுதிகளை தேடி தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக ‘டிக்’ செய்த தொகுதிகளும், புது ‘ஃபார்முலா’ பின்னணியும்
அசத்தும் மம்தா... அசராத பாஜக... மேற்கு வங்கத்தில் முந்துவது யார்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in