அரசியல்
போட்டுத் தாக்கிய ராஜ கண்ணப்பன்... திமுக மீது தேமுதிக கோபமா?
மதுரை மாவட்டம் மேலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசும்போது, “விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இல்லை என்று நாம் சொல்ல முடியாது. தேமுதிக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம்தான் இருக்க வேண்டும்” என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், தேமுதிகவை பற்றி கேட்டபோது, ‘தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள்’ என்று கூறினார். இது தேமுதிகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் அவர் தேமுதிகவை விமர்சித்து பேசியது, அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.