மதிமுக ‘சீட்’ கண்டிஷன் - திமுகவுடன் மல்லுக்கட்டு?

“ஆட்சி அதி​காரத்​தில் மதி​முக ஒரு​போதும் பங்கு கேட்​டதில்லை; இனி​யும் கேட்க மாட்​டோம்” என மதி​முக பொதுச் ​செயலா​ளர் வைகோ முன்​கூட்​டியே ஒப்​புதல் வாக்குமூலம் கொடுத்​து​விட்​டாலும், இம்​முறை 12 தொகுதிகளை திமுக-​விடம் கேட்​டுப் பெற்​றாக வேண்​டும் என்​ப​தில் மதி​முக-​வினர் மல்​லுக்​கட்​டுக்​கும் தயா​ராய் இருக்​கி​றார்​கள்.

தேர்​தல் ஆணை​யத்​தின் அங்​கீ​காரத்​தைப் பெறு​வதற்​காக 12 தொகு​தி​களைக் கேட்க மதி​முக தயா​ராகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள். இது குறித்​துப் பேசிய தாயகப் புள்​ளி​கள், “2021 சட்​டமன்​றத் தேர்​தலில் 6 தொகு​தி​களில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்​றோம். இந்த முறை, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்​கப்​பட்​ட​தில் நிர்வாகிகள் கடும் அப்​செட்.

சமீபத்​தில் நடந்த மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்தில், “நமக்கு ராஜ்ய சபா சீட் தரப்​ப​டாத​தால் இம்​முறை 12 இடங்களைக் கேட்க வேண்​டும்” என மாவட்​டச் செயலாளர்கள் கண்​டிப்​புடன் பேசி​னார்​கள். வைகோ​வும் ‘தி​முக குழு அமைத்​ததும் பேசுவோம்’ எனச் சொல்லி இருக்கி​றார்.

இதனிடையே தனிப்​பட்ட முறை​யில் துரை வைகோ எடுத்த சர்​வே​யில் வாசுதேவநல்​லூர், மதுரை தெற்​கு, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திருச்சி கிழக்​கு, மணப்​பாறை, கும்​பகோணம், பாப​நாசம், மயி​லாடு​துறை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 தொகு​தி​களில் மதி​முக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்​ப​தாகத் தெரிய​வந்​துள்​ளது. அந்த 12 தொகுதி​களை தரவேண்​டும் அல்​லது கடந்த முறையைப் போலவே 6 இடங்​களை ஒதுக்​கு​வதுடன் ஏப்​ரலில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்​களில் ஒன்​றை​யும் பொதுச்​செய​லா​ள​ருக்​​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் என திமுக-​விடம் கேட்​ப​தாக இருக்​கிறது தலை​மை” என்​றனர்​.

மதிமுக ‘சீட்’ கண்டிஷன் - திமுகவுடன் மல்லுக்கட்டு?
வானில் ஓர் அபூர்வ நிகழ்வு... 6 கோள்கள் அணிவகுப்பு - என்ன ஸ்பெஷல்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in