6 சீட் + டார்ச் லைட்... திமுக கூட்டணியில் கமல் கட்சி கறார் ப்ளான்!

அண்​மை​யில் நடந்த மக்​கள் நீதி மய்​யத்​தின் பொதுக் குழுவில், “பூத் கமிட்​டிக்கு அஞ்சு பேரைக் கூடப் பிடிக்க முடியலை​யே... நான் தோற்​றுப்​போன அரசி​யல்​வா​தி” என கமல் எமோஷனலாகப் பேசி​யது மய்​யத்​தினரை அதிர வைத்​தது. இதையடுத்​து, ‘திட்​டி​னால் மட்​டும் போதாது தலை​வரே... தேர்​தலில் நமக்​கான பங்கை கேட்டு வாங்கினால் தான் கட்சி வளரும்’ என நிர்​வாகி​கள் இப்​போது கமலுக்கு நெருக்​கடி கொடுக்​கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து நம்​மிடம் பேசிய மக்​கள் நீதி மய்​யத்​தின் நிர்வாகி​கள் சிலர், “பொதுக்​குழு​வில் கமல் பேசி​யதை பார்த்து நிர்​வாகி​கள் அதிர்ச்சி​யடைந்து விட்​டார்​கள். மக்கள் நம்மை ஆதரிக்க வேண்​டும் என்​றால் போராட்​டம், ஆர்ப்​பாட்​டம் நடத்த வேண்​டும். பிறகு சொந்த சின்னத்தில் தேர்​தலில் நிற்க வேண்​டும். அப்​போது​தான் கட்சி வளரும். இதையெல்​லாம் விட்​டுட்டு எங்​களைத் திட்​டி​னால் கட்சி எப்​படி வளரும் என பலரும் தலை​வரிடம் தங்​களது ஆதங்கத்தை கொட்​டினர். இதையடுத்தே கட்சி இப்​போது முக்​கிய​மான கட்​டத்தை நோக்கி நகர்ந்​திருக்​கிறது.

அதன்​படி, வரும் தேர்​தலில் ஆறு தொகு​தி​களில் நிற்க வேண்​டும். அது​வும் சொந்​தச் சின்​ன​மான டார்ச்​லைட் சின்னத்​தில்​தான் களமிறங்க வேண்​டும் என முடிவு செய்​திருக்​கி​றோம். இதற்​காக மயி​லாப்​பூர், வேளச்​சேரி, விருகம்பாக்​கம், ஆலந்​தூர், கோவை தெற்​கு, மதுரை மத்தி அல்​லது தெற்கு என எங்​களுக்​கான தொகு​தி​களை தயாராக வைத்​திருக்​கி​றோம். விரை​வில் இதுபற்றி முதல்வ​ருடன் பேசுவ​தாகச் சொல்லி இருக்​கி​றார் கமல்” என்​ற​னர் மநீம நிர்வாகிகள்.

இது குறித்து மநீம செய்​தித் தொடர்​பாளர் முரளி அப்பாஸிடம் கேட்​டதற்​கு, “கடந்த முறை 10 லட்​சம் வாக்​குகள் வாங்​கினோம். தலைவரின் இமேஜ் உலகறிந்​தது. அதனால் இம்​முறை திமுக கூட்​ட​ணி​யில் நியாய​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​களைக் கேட்​போம். சொந்​தச் சின்​னத்​தில் நிற்​ப​தில் உறு​தி​யாக இருக்​கி​றோம். எத்​தனை தொகு​தி​கள், எந்​தெந்த தொகு​தி​கள் என்​பதை இப்​போது சொல்ல முடி​யாது” என்​றார்​.

6 சீட் + டார்ச் லைட்... திமுக கூட்டணியில் கமல் கட்சி கறார் ப்ளான்!
மை லார்ட்: திரைப் பார்வை - ராஜுமுருகனின் திரைமொழி வென்றதா?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in