அரசியல்
தேமுதிக ‘முடிவு’... அலறும் 2 சிட்டிங் எம்எல்ஏக்கள்!
யாருடன் கூட்டணி என முடிவெடுக்க முடியாமல் வழக்கம் போல் ‘இழுத்துக்’ கொண்டிருக்கும் பிரேமலதா, “இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக, யாருடன் கூட்டணி எனச் சொல்லி விடுவோம்” என அடுத்த கெடுவை வைத்திருக்கிறார். பிரேமலதா தங்கள் பக்கம் வந்தால் ‘சிறப்பு’ என கணிக்கிறது திமுக தலைமை. ஆனால், விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ-வான எம்.ஆர்.ராதாகிருஷ்ணனும், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ-வான வசந்தம் க.கார்த்திகேயனும் ‘திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடக் கூடாது தெய்வமே...’ என இஷ்ட தெய்வங்களை எல்லாம் ‘இன்ஸ்டால்மென்ட்டில்’ வேண்டிக் கொண்டே இருக்கிறார்களாம். இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.