‘அய்யா பாமக’ புதிய கட்சி... ராமதாஸ் தரப்பு அதிரடி!

பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி கட்டுப்பாட்டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ராம​தாஸ் அணி​யில் கட்சியின் தலைமை நிலைய செய​லா​ள​ராக இருக்​கும் அன்​பழ​க​னின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்​டாளி மக்​கள் கட்​சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது.

பாமக​வின் பெயர், வண்​ணம், கொடி ஆகிய​வற்றை பிரதிபலிக்க கூடிய வகை​யில், ஏற்​கெனவே இருக்​கும் பாமக கொடி​யில் ராம​தாஸின் முகத்தை மட்​டும் பதித்து புதி​தாக கொடி​யும் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​தலில் பாமக சார்​பில் அன்​புமணி நிறுத்​தும் வேட்​பாளர்​களுக்கு எதி​ராக, வேட்​பாளர்​களை நிறுத்​து​வதற்​காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்படு​கிறது.

இதுபற்றி ராம​தாஸ் தரப்​பில் கேட்ட போது, “அய்யா பாமக என்ற புதிய கட்சி பற்றி எது​வும் தெரி​யாது. நாங்​கள் கூட்டணி பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்டு வருகி​றோம்” என்றனர்.

அன்​புமணி தரப்​பில் கேட்டபோது, “கட்​சி​யும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி​யிடம் உள்​ளது. அவர்​களால் ஒன்றும் செய்ய முடிய​வில்​லை. அதனால், தேர்​தலில் எங்களுக்கு எதி​ராக வேட்​பாளர்​களை நிறுத்​து​வதற்​காக புதிய கட்​சியை தொடங்​கி​யுள்​ளனர். திமுக​வின் சதி ஆலோ​சனை​யின்​படியே புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்​சிக்கு கொடுத்த முகவரிக்கு சரி​யான ஆவணம் சமர்ப்​பிக்​காத​தால், தேர்தல் ஆணை​யம் கட்​சியை பதிவு செய்ய மறுத்​துள்​ளது” என்​றனர்.

‘அய்யா பாமக’ புதிய கட்சி... ராமதாஸ் தரப்பு அதிரடி!
அதிமுக ‘டீல்’, அண்ணாமலை, கேசவ விநாயகம்... அதிரடி காட்டும் பாஜக!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in