அதிமுக கூட்டணியில் பாஜக, பாமகவுக்கு எத்தனை சீட்?

அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. பாமக-வுக்கு 18 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக பழனிசாமி உறுதியளித்ததாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 8-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அப்போது, பாஜக-வுக்கு 56 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும். இந்தக் கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இடம்பெற வேண்டும் என்று அமித் ஷா, பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் பழனிசாமியை நேரில் சந்தித்தார். அப்போது, பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 56 தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், திமுக கூட்டணிக்கு ராமதாஸ் செல்ல வாய்ப்புள்ளது குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், கூட்டணி இறுதியானதும், யாருக்கு எந்தனை தொகுதிகள் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என பழனிசாமி கூறியதாகத் தெரிகிறது. தொடர்ந்து, வரும் ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதில் பங்கேற்க வருமாறு பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன், அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

இந்த மாநாட்டுக்கு முன்பாக கூட்டணியில் இதர கட்சிகளையும் சேர்த்து, ஜனவரி 20-ம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும். பிரதமர் பங்கேற்கும் மாநாட்டில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மேடையேற வேண்டும் என்று பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக, பாஜக-வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 56 தொகுதிகளின் பட்டியல், பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட நிலையில், விரைவில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது தெரியவரும். இதனிடையே, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுக்கு சீட் எதுவும் ஒதுக்க முடியாது இல்லை என பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஜி.கே.வாசன், விஜய்யின் தவெகவுடன் கூட்டு சேர அப்ளிகேஷன் போட்டிருந்தாராம். ஆனால், யாராவது வந்தால் உள்ளே இழுத்துப் போடலாம் என நினைக்கும் அந்தக் கட்சியிலேயே, “அவரெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. தேவைப்பட்டால் பிப்ரவரியில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி, அந்த அப்ளிகேஷனை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார்களாம்.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமகவுக்கு எத்தனை சீட்?
கல்விக் கடன் பெற எதெல்லாம் தடையே இல்லை? - ஒரு சட்ட வழிகாட்டுதல்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in