ஈரானின் ‘கார்க்’ தீவு மீது அமெரிக்கா ‘குறி’ வைப்பதன் பின்னணி என்ன?

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுத்து அரை மாத காலம் கடந்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளவில் எரிவாயு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க, ஈரான் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை அதற்குத் திரும்பத் தரும் வகையில் அமெரிக்கா, ஈரானின் ‘கார்க் தீவு’ (Kharg Island) பகுதியை ‘குறி’ வைத்துள்ளது.

ஈரானின் ‘மணி மகுடம்’ (Crown Jewel) என்று தான் இந்த கார்க் தீவு அழைக்கப்படுகிறது. பாரசீக வளைகுடாவின் முத்து (Pearl of Persian Gulf) என்றும் அறியப்படும் கார்க் தீவு ஏன் ஈரானுக்கு மிகவும் முக்கியம். ஹார்முஸ் ஜலசந்தியின் வடமேற்கே 483 கி.மீ தொலைவில், ஈரான் கடற்கரையிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கார்க் தீவு. இங்கிருந்துதான் ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது.

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகள் எல்லாம் எண்ணெய் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்ட நிலையில், ஈரான் மட்டும் தடையின்றி கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 10 வரை நாளொன்றுக்கு 1.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது. ஈரானுக்கு பொருளாதார ரீதியாக கார்க் தீவு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்தத் தீவு குறித்தும், இதையொட்டிய ஈரான் போரின் பின்புல அரசியலையும் தெளிவாக விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

ஈரானின் ‘கார்க்’ தீவு மீது அமெரிக்கா ‘குறி’ வைப்பதன் பின்னணி என்ன?
10, +2 மாணவர்கள் கவனத்துக்கு... விடைத்தாள் நகலும், ஆர்டிஐ சட்டமும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in