வீடு கட்ட ‘போரோதெர்ம்’ செங்கற்கள் - மவுசு கூடுவது ஏன்?

கனவு இல்லத்தை வடிவமைக்க இன்று பல்வேறு நவீன தயாரிப்புகள் கட்டுமான உலகை ஆக்கிரமித்துள்ளன. இதில் ஒன்றுதான் செங்கலுக்கு மாற்றான போரோதெர்ம் (Porotherm) செங்கற்கள். இன்று ப்ரீ காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டாலும், செங்கல் மூலம் கட்டப்படும் வீடுகளே நீடித்து நிற்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. இதில், தற்போது ஸ்மார்ட் செங்கல் அதாவது போரோதெர்ம் களிமண் செங்கல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத இந்த போரோதெர்ம் செங்கற்கள் இன்று கட்டுமானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை கிடைமட்டம் மற்றும் செங்குத்து ஆகிய இரண்டு வகைகளில் கிடக்கிறது. இதில், கிடைமட்ட துளையிடப்பட்ட செங்கற்கள் சுமை தாங்காத கட்டமைப்புகளுக்கு பயன்படுகின்றன.

செங்குத்து துளையிடப்பட்ட செங்கற்கள் சுமை தாங்கும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, தரைதளம் மற்றும் முதல் தளம் வரை பயன்படுத்த முடியும். இயற்கையாக உள்ளூரில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படும் போரோதெர்ம் செங்கற்களின் உற்பத்தி செயல்முறை சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த போரோதெர்ம் செங்கற்கள் பசுமை சான்றிதழை பெற்றதாகும்.

போரோதெர்ம் செங்கற்கள், வழக்கமான செங்கற்களை ஒப்பு நோக்கும்போது குறைந்த எடை கொண்டவை. இதனால் கட்டமைப்பின் எடையும் குறைகிறது. செலவும் குறைகிறது. இதுதவிர, கட்டிடத்துக்குள் கோடையில் குளிர் சூழலையும், குளிரில் இதமான வெப்பத்தையும் அளிக்கிறது. இந்த போரோதெர்ம் செங்கலை பயன்படுத்தி கட்டுமானம் மேற்கொள்ளும் போது மணல், சிமென்ட் பயன்பாடு தேவையில்லை. இதுவும் செலவை குறைக்கிறது. பராமரிப்பு செலவும் அதிகமில்லை.

நீடித்த வலிமையான இந்த வகை செங்கற்களின் தண்ணீர் உறிஞ்சும் அளவு குறைவு. அதேபோல், விரிசல் அபாயமும் குறைவு. ஈரப்பதத்தைத் தக்கவைத்து விரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் போரோதெர்ம் செங்கற்கள் இன்றைய கட்டுமான உலகில் அதிகளவில் விரும்பப்படுகின்றன.

வீடு கட்ட ‘போரோதெர்ம்’ செங்கற்கள் - மவுசு கூடுவது ஏன்?
எப்ஸ்டீன் பின்புல மர்மங்கள்... அதிரவைக்கும் சீரிஸ் எப்படி?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in