பொது
‘வெள்ளை அறிக்கை’ என்றால் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘வெளிப்படைத் தன்மையாக இருக்கிறோம்’ என்பதை ஓர் அரசு, மக்களிடத்தில் தெரிவிப்பதுதான் வெள்ளை அறிக்கை. அதாவது முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நிதிநிலையை கையாண்ட விதம், திட்டங்களை செயல்படுத்திய விதம் குறித்து நடப்பு அரசால் வெளியிடப்படும் ஆழமான, தெளிவான பார்வையுடன் மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகும்.
இதன் மூலம் அரசில் இருக்கும் சிக்கல்கள், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் பிரச்சினைகள், தீர்வு, செயல்முறை ஆகியவை விரிவாக மக்களிடம் தெரிவிப்பதாகும். உண்மையில் வெள்ளை அறிக்கை (Whitepaper) என்றால் என்ன, அது ஏன் வெளியிடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் குறித்து சற்று தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.