அந்த ஒரு ‘பதில்’... சுஷ்மிதா சென் ‘பிரபஞ்ச அழகி’ ஆன கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பல தடைகளை சமாளித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சுஷ்மிதா சென். “பட்டம் வெல்லும் வாய்ப்பெல்லாம் சுஷ்மிதா சென்னுக்குக் கிடையாது” என்று அரங்கத்தில் முணுமுணுக்கப்பட்டது. அழகிப் பட்டத்தை வெல்வதற்காக இறுதிச்சுற்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அறிவுபூர்வமாகப் பதிலளிக்கும் தருணம் வந்தது. “உங்களைப் பொறுத்தவரை ஒரு பெண்ணாக இருப்பதன் சாராம்சம் என்ன?” - சிறுமிக்கும் இளம் பெண்ணுக்கும் இடைப்பட்ட கோட்டில் நின்று கொண்டிருந்த சுஷ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்.
சாரம்சம் என்றால் என்னவென்று சுஷ்மிதா சென்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் சமாளித்து அவர் அளித்த பதில், பார்வையாளர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தியது. கைதட்டல் நிற்க நேரமானது. இந்தப் பதில் நடுவர்களின் புருவங்களை உயரவைத்தது. இவ்வாறாக, 1994-ல் சுஷ்மிதா சென் ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தைச் சூடிக்கொண்டதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.