தங்கம் விலை ‘அரசியல்’ - இனி வீழ்ச்சியா, எழுச்சியா?

2025 டிசம்பர் இறுதியில் 22 காரட் தங்கம் விலை பவுனுக்கு 1 லட்சத்து 120 ரூபாயாக இருந்தது. அதுவே 2026 ஜனவரி 29-ம் தேதி ஒரு 34 ஆயிரத்து 400 என்றளவில் உயர்ந்தது. அதாவது, ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்திலேயே தங்கம் விலை பவுனுக்கு 34 ஆயிரம் ரூபாய் உயர்வு என்பது வரலாறு காணாத உச்சம்.

ஒப்பீட்டு அளவில், கடந்த 2025-ம் ஆண்டில் 12 மாதங்களில் பவுனுக்கு 40 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில், 2026-ல் ஜனவரியில் மட்டும் பவுனுக்கு 34 ஆயிரம் ரூபாய் உயர்வு என்றால், தங்கம் விலை அடுத்து என்னவாகும் என்ற அச்சம் பரவத் தொடங்கியது. ஆனால், ஜனவரி 30. ஜனவரி 31, பிப்ரவரி 2 என அடுத்தடுத்து மூன்று வர்த்தக நாட்களில் தங்கம் விலை ஒவ்வொரு நாளுமே பவுனுக்கு 7,600 ரூபாய் என்ற அளவில் குறைந்தது. அதாவது வெறும் 3 நாட்களில் பவுனுக்கு 22,800 ரூபாய் குறைந்தது.

அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதி இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 7,500 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்தது. இதே நிலைதான் வெள்ளி விலை நிலவரத்திலும் நடக்கிறது. இந்த வீழ்ச்சி, எழுச்சிக்கும் பின்னால் உள்ள சர்வதேச பொருளாதார அரசியல் மற்றும் இனி முதலீடு நோக்குடன் தங்கத்தை நாடுவது நல்லதா என்பது குறித்து சற்றே தெளிவாக விவரிக்கிறது மேலே உள்ள வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

தங்கம் விலை ‘அரசியல்’ - இனி வீழ்ச்சியா, எழுச்சியா?
ராமதாஸுக்கு ‘நல்ல காலம்’ பிறக்குமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in