

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய பொன். ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், பாஜக கூட்டணி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்றும் தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக இன்று மாலை தொடங்குகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், பாஜக கூட்டணி அறிவிப்பை, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்து அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று, (வியாழக் கிழமை) பாஜகவுன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.