Short news

‘வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன்?

‘வடசென்னை 2’ படத்தில் மணிகண்டன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாகவும், அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கார்த்திகேயன் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரித்தபோது, ‘வடசென்னை 2’ இப்போதைக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்கள். வெற்றிமாறன் தயாரிப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் மணிகண்டன் படமொன்றில் நடிக்கவுள்ளார். ஆனால், அது ‘வடசென்னை 2’ இல்லை என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x