அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமண ஆல்பம்!

அரசியல், விளையாட்டு, திரைப் பிரபலங்களின் சங்கமம்
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமண ஆல்பம்!
Published on

இந்​திய கிரிக்​கெட் ஜாம்​ப​வா​னான சச்​சின் டெண்​டு​கல்​கரின் மகனும் கிரிக்​கெட் வீரரு​மான அர்ஜுன் டெண்டுல்கருக்​கும், தொழில்​முனை​வோர் சானியா சந்தோக்​கும் கடந்த ஆகஸ்ட்​டில் திரு​மணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்​களது திரு​மணம் மும்​பை​யில் உள்ள ‘தி செயின்ட் ரெஜிஸ்' ஓட்​டலில் வியாழக்கிழமை பிரம்மாண்​ட​மாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்​சி​யில் ஐசிசி தலை​வர் ஜெய் ஷா, பிசிசிஐ துணைத் தலை​வர் ராஜீவ் சுக்​லா, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தேர்​வுக் குழுத் தலை​வர் அஜித் அகர்​கர், தேர்​வுக்​குழு உறுப்​பினர் பிரக்​யான் ஓஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்​னாள் கேப்​டன்​களான தோனி, ராகுல் திரா​விட், முன்​னாள் வீரர்​களான ஹர்​பஜன் சிங், வெங்​கடேஷ் பிர​சாத், முகமது கைஃப், பியூஷ் சாவ்​லா, யூசுப் பதான் மற்​றும் வர்​ணனை​யாளர் ஹர்ஷா போக்லே ஆகியோரும் கலந்து கொண்​டனர்.

பாலிவுட் பிரபலங்​களான அமி​தாப் பச்​சன், அபிஷேக் பச்​சன், ஐஸ்​வர்யா ராய், ஷாருக்​கான், ஆமீர்​கான், ஆஷா போஸ்​லே, சோனு நிகாம் ஆகியோர் திரு​மணத்​தில் பங்​கேற்​றனர். முகேஷ் அம்​பானி, அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in