
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர்கள் யார், யார் என்பதை பார்ப்போம். இந்தப் பட்டியலில் பல அதிரடி வீரர்கள் உள்ளனர். அதில் டாப் லிஸ்ட்டில் உள்ளவர்கள்…
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2023 ஐபிஎல் சீசனில் 13 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான சுனில் நரைன், தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடியாக ஆடுவது வழக்கம். 2017 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக 15 பந்துகளில் நரைன், அரைசதம் விளாசினார்.
2024 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
2021 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் 16 பந்துகளில் அரைசதம் விளாசி உள்ளனர்.
கடந்த 2013 சீசனில் 17 பந்துகளில் அரைசதம் கடந்தால் கிறிஸ் கெயில். அந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி இருந்தார். புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார்.