
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தாயகம் திரும்பிய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்துக்கு சென்ற வீரர்கள் அங்குள்ள தயான்சந்த் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். | படங்கள்: சுஷில் குமார் வர்மா