
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றெடுத்த வீராங்கனை மனு பாகர் புதன்கிழமை நாடு திரும்பினார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் திரண்டியிருந்த மனு பாகரின் குடும்பத்தினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மனு பாகருக்கும் அவருடன் வந்த பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். | படங்கள்: ஷிவ் குமார் புஷ்பகர்