10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம்: ‘வழக்கமான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். மேலும் கூடுதலாக போட்டிகள் நடத்தப்பட்ட 3 மைதானங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கிடைக்கும்’ என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 10 இடங்களில் ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முறை இந்த இடங்களுடன் குவாஹாட்டி, விசாகப்பட்டினம் மற்றும் தரம்சாலாவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.