ஐபிஎல் 2024 சாம்பியன் KKR கொண்டாட்ட தருணங்கள் - புகைப்பட தொகுப்பு

IPL final KKR celebrations
IPL final KKR celebrations
Published on
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 10.3 ஓவர்களில் இலக்கை கடந்து கொல்கத்தா அணி அசத்தியது.

சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்கள் எடுத்தது.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கொல்கத்தா அணி விரட்டியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இதில் நரைனை 6 ரன்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ்.

அதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் குர்பாஸ் இணைந்து ரன் குவித்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அதன் பலனாக பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. குர்பாஸ் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

10.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கையும் எட்டி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2014-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மகிழ்ச்சியுடன் கைதட்டி மகிழ்ந்த தருணம்

போட்டி முடிந்த பிறகு சோகத்துடன் வெளியேறிய ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன்

கேகேஆர் அணியின் தலைமை ஆலோசகர் கவுதம் கம்பீரை உச்சி முகர்ந்து பாராட்டிய  ஷாருக்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in