இன்று காலை 8.45 மணி அளவில் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மைதானத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.