
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. அதன் புகைப்பட அணிவகுப்பு இங்கே... | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இந்நிலையில், பகல்பத்து உற்சவம் இன்று (டிச.12) காலை தொடங்கியது.
நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை நம்பெருமாள் முன் அரையர்கள் அபிநயத்துடன் இசைத்து பாடினர். அர்ச்சுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்த நம்பெருமாள், இரவு 7.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். தொடர்ந்து 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.
பகல்பத்து துவக்க நாளான இன்று பெருந்திரளான பக்தர்கள் நம்பெருமாளையும், ஆழ்வார்களையும் வழிபட்டு சென்றனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரம்பதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது.