காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.20) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
கோயில் பிரகாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
சனீஸ்வர பகவானுக்கு பால், நல்லெண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது.
தங்க கவசத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவான்.
சனிப்பெயர்ச்சியின்போது சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனைக் காட்டப்படுகிறது.
வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் காட்சியளித்த உற்சவர் சனீஸ்வர பகவான்.