வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தலையில் சுமந்து வரப்பட்ட அம்மன் சிரசுவை பக்தர்கள் மலர்தூவி தரிசனம் செய்தனர். கெங்கையம்மன் சிரசு திருவிழாவை காண்பதற்கு அருகில் உள்ள கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்