உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைபெருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தது.