இவ்விழாவில் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமி அம்பாள் உள்படப் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் ரிஷப வாகனத்தில் காலை புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மகாமக குளத்தின் 4 கரைகளில் எழுந்தருளினர்.